அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைவர் பணிநீக்கம்

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் பென்டகனின் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் (DIA) தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஜெஃப்ரி க்ரூஸ் மற்றும் இரண்டு மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளார்.
ஜெஃப்ரி குரூஸைத் தவிர, ஹெக்ஸெத் அமெரிக்க கடற்படை ரிசர்வ்ஸின் தலைவர் வைஸ் அட்மிரல் நான்சி லாகோர் மற்றும் கடற்படை சிறப்பு போர் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மில்டன் சாண்ட்ஸ் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று அதிகாரிகளும் தாங்கள் ஏன் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள் என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்த DIA இன் ஆரம்ப கண்டுபிடிப்புகள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கூற்றுகளுக்கு முரணாகத் தோன்றியதை அடுத்து இந்த நீக்கம் இடம்பெற்றுள்ளது.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் குறைந்த சேதத்தை மட்டுமே ஏற்படுத்தியதாக அந்த நிறுவனத்தின் ஜூன் மதிப்பீட்டில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த வசதிகள் “முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன” என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.