Google நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
இணையத்தில் Google நிறுவனத் தேடல் தளத்தின் ஏகபோகச் செயல்பாடு சட்ட விரோதமானதென அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வட்டார நீதிபதி அமித் மேத்தா (Amit Mehta) இவ்வாறு தீர்ப்பளித்துள்ளார்.
இணையத் தேடல் சந்தையின் சுமார் 90 விழுக்காட்டை Google நிறுவனமே கட்டுப்படுத்துகிறது. அதற்கு எதிராக அமெரிக்க நீதித்துறை 2020 ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தது.
இணையத் தேடலிலும், விளம்பரம் தொடர்பான அம்சங்களிலும் ஏகபோகத்தை நிலைநிறுத்த Google நிறுவனம் போட்டியாளர்களை நசுக்குவதாக நீதிபதி கூறினார்.
கைத்தொலைபேசிகளிலும், கணினிகளிலும் முதன்மைத் தேடல் தளமாக Googleஐக் கொண்டுவர அந்நிறுவனம் பில்லியன் கணக்கான டாலர் செலவிட்டிருப்பதை நீதிபதி சுட்டினார்.
தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய Google நிறுவனம் திட்டமிடுகிறது.
(Visited 7 times, 1 visits today)