பிரபல இந்திய தொழிலதிபர் கௌதம் அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் அனுப்பிய சம்மன்!
பிரபல இந்திய தொழிலதிபர் கௌதம் அதானிக்கு எதிரான லஞ்ச புகார் தொடர்பில் அமெரிக்காவின் செக்யூரிட்டி மற்றும் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரது மருமகன் சாகர் அதானி, ‘அதானி கிரீன்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அவர் தனது நிறுவனத்திற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை பெறுவதற்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், அமெரிக்க முதலீட்டாளர்கள் உள்ளிட்ட சர்வதேச முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதன்படி, அவர்களை 21 நாட்களுக்குள் நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.





