ஆபத்தான புயல் காற்றை எதிர்கொள்ளத் தயாராகும் அமெரிக்கா – கனடா

அமெரிக்காவின் வடகிழக்குக் கரையோரப் பகுதிகள் லீ எனப்படும் ஆபத்தான புயல்காற்றை எதிர்கொள்ளத் தயாராகின்றன.
வலுவான புயல் நியூ இங்கிலந்தின் கிழக்குப் பகுதியையும் கனடாவின் அட்லாண்டிக் கரையையும் வரும் வாரயிறுதியில் தாக்கவிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
5ஆவது பிரிவிலிருந்து முதல் பிரிவுக்குப் புயல்காற்று வலுவிழந்திருக்கிறது. எனினும் அது இன்னும் ஆபத்தான ஒன்றாக இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறினர்.
15ஆண்டுக்குப் பின் முதல்முறையாக மெய்ன் (Maine) மாநிலத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கனடாவும் புயல்காற்றை எதிர்கொள்ளத் தயாராகுவதாக குறிப்பிடப்படுகின்றது.
(Visited 14 times, 1 visits today)