அமெரிக்காவின் படகு கவிழ்ந்து விபத்து – மூவர் மரணம் – 7 பேர் மாயம்

அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழதுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் ஏழு பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களில் இருவர் சிறுவர்கள் என தெரியவந்துள்ளது.
மீட்புப் பணிக்காகக் படகும் ஹெலிகாப்டரும் அனுப்பட்டன. 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
படகில் 9 பேர் பயணித்துள்ளனர். அந்தப் படகு எங்கிருந்து வந்தது எங்கே செல்கிறது என்ற தகவல்கள் கிடைக்கவில்லை.
ஆனால் படகில் இருந்தவர்களில் சிலர் இந்தியர்கள் என்று நம்பப்படுகிறது. காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் பணி தொடர்கிறது.
சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)