ரஷ்யாவின் முன்னணி அரச ஊடகத்திற்கு தடை விதித்த அமெரிக்கா

ரஷ்யாவின் முன்னணி அரச ஊடக நிறுவனமொன்றுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ள அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் என்டணி பிளிங்கன், RT ஊடகம் ரஷ்யாவின் உளவுத்துறை செயற்பாட்டின் ஒரு பிரிவு என விமர்சித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்காவில் ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தும் ரஷ்யாவின் செயற்பாடுகளிலும் குறித்த ஊடகம் பங்குபற்றியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்கத் தேர்தலில் குறித்த ஊடகம் செல்வாக்கு செலுத்த முயன்றதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் யுக்ரைனுக்கு எதிராகப் போர் புரியும் ரஷ்ய இராணுவத்தினருக்காக நிதி திரட்டும் பணியிலும் குறித்த ஊடக நிறுவனம் ஈடுபட்டதாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் என்டணி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
(Visited 18 times, 1 visits today)