கரீபியன் கடலில் மேலும் ஒரு படகை தாக்கிய அமெரிக்கா – ஆறு பேர் உயிரிழப்பு
கரீபியன் (Caribbean) கடலில் போதைப்பொருட்களுடன் பயணித்த மற்றொரு படகை அமெரிக்க இராணுவம் தாக்கியதாக பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த படகு ட்ரென் டி அரகுவா (Tren de Aragua) கும்பலால் இயக்கப்பட்டதாகவும் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
மேலும், தாக்குதலை தொடர்ந்து சமூக ஊடக பதிவில், “நீங்கள் ஒரு போதைப்பொருள் பயங்கரவாதியாக இருந்தால், நாங்கள் அல்-கொய்தாவை (al-Qaeda) நடத்துவது போலவே உங்களை நடத்துவோம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்று கூறப்படும் நபர்களுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் நடத்திய பத்தாவது தாக்குதல் இதுவாகும். இதுவரை மொத்தம் 46 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்தி
(Visited 4 times, 4 visits today)




