அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் கொழும்பில் முத்தரப்பு சந்திப்பு!
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் அலிசன் ஹூக்கர் இலங்கை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவரை வரவேற்றார்.
அதையடுத்து அவர்கள் இருவரும் கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை விமானப்படைத் தளத்திற்குச் சென்றனர்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விமானப்படையின் சி-130 விமானத்தைப் பார்வையிட்டதுடன், அங்கு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படையினருடன் கலந்துரையாடியுள்ளனர்.
இதையடுத்து அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் அலிசன் ஹூக்கர் அரசாங்க பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டவர்களை சந்தித்து அவர் கலந்துரையாடவுள்ளார்.





