அமெரிக்காவின் முக்கிய தெருவிற்கு மறைந்த வங்கதேச தலைவரின் பெயர் வைக்க ஒப்புதல்
அமெரிக்காவின்(America) மிச்சிகன்(Michigan) மாநிலத்தில் உள்ள ஹாம்ட்ராம்க்கில்(Hamtramck) உள்ள ஒரு தெருவிற்கு, மறைந்த வங்காளதேச தேசியவாதக் கட்சித் தலைவர் கலீதா ஜியாவின்(Khaleda Zia) நினைவாக பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
“கார்பென்டர் தெரு”(Carpenter Street) என்பதை “கலீதா ஜியா தெரு”(Khaleda Zia Street) என்று மறுபெயரிடுவதற்கான முன்மொழிவுக்கு ஹாம்ட்ராம்க் நகர சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முயற்சியை தற்போது ஹாம்ட்ராம்க் நகர சபையில் பணியாற்றும் நான்கு வங்காளதேச வம்சாவளி கவுன்சிலர்கள் முன்னெடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு வங்காளதேசத் தலைவர் அமெரிக்க மண்ணில் கௌரவிக்கப்படுவது இது முதல் நிகழ்வு அல்ல. இதற்கு முன்னதாக சிகாகோவில்(Chicago) உள்ள ஒரு தெருவிற்கு முன்னர் மறைந்த ஜனாதிபதி ஜியாவுர் ரஹ்மானின்(Ziaur Rahman) பெயரிடப்பட்டுள்ளது.





