வட அமெரிக்கா

உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டொலர் ராணுவ உதவி – அமெரிக்கா அறிவிப்பு

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரில் உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 800 நாட்களைத் தாண்டியும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அதன் உதவியால் உக்ரைன் ரஷ்யாவின் கடும் தாக்குதலை சமாளித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவருகின்றன.

US announces new $400 mln military aid package for Ukraine, official says -  The Economic Times

ஆனால் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொள்ளாததால் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 400 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதில் ராணுவ டாங்கிகள், ஏவுகணைகள் உட்பட அதிநவீன ஆயுதங்கள் பலவும் உக்ரைனுக்கு வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தற்போது அறிவிக்கப்ப்ட்டுள்ள ராணுவ உதவிகளையும் சேர்த்து ரஷ்யாவுடனான போர் தொடங்கியது முதல் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுத உதவி 50.6 பில்லியன் டொலரை எட்டியுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!