அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் – மத்திய கிழக்கில் பெரும் பதற்றம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதை அமெரிக்க, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
மிகப்பெரிய போர் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதேவேளை ஈரான் பழிவாங்கும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதென இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
ட்ரம்ப், ஈரானிய அரசாங்கத்தை கையகப்படுத்த முயற்சி செய்துள்ளார் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதற்காக ஈரானிய மக்களுக்கு இப்பொழுது செயற்படுங்கள் என அவர் அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஈரானில், ஐந்து நகரங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவுததம் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அணுசக்தி ஒப்பந்தத்தைச் சுற்றி அமெரிக்காவின் அழுத்தம் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஈரானின் பேச்சுவார்த்தை நிலை மகிழ்ச்சியாக இல்லையென்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.





