அமெரிக்காவும் பிரிட்டனும் ஹூதி இலக்குகளை மீண்டும் தாக்கி அழிப்பு
ஏமனில் உள்ள 8 ஹவுதி இலக்குகள் மீது அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைகள் தாக்குதல் நடத்தின.
ஹவுதி போராளிகளுக்கு சொந்தமான நிலத்தடி ஆயுத கிடங்கு மற்றும் ஏவுகணை அமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக பென்டகன் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகின் முக்கியமான கடல் பாதைகளான செங்கடலில் வணிகக் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்கத் தயங்கப் போவதில்லை என்றும் பென்டகன் கூறியுள்ளது.
ஹவுதி போராளிகளுக்கு எதிரான தொடர் தாக்குதல்களுக்கு ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.





