இலங்கையிலிருந்து நாளை விடைபெறுகிறார் அமெரிக்க தூதுவர்!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் Julie Chang, நாளை (16) தாயகம் திரும்புகின்றார்.
இவ்வாறு விடைபெறவுள்ள தூதுவர், கடந்த சில வாரங்களாக பிரியாவிடை சந்திப்புகளை நடத்திவருகின்றார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பேச்சு நடத்தி இருந்தார்.
பாதுகாப்பு செயலாளர் உட்பட உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்திருந்தார்.
பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரியவை நேற்று சந்தித்து பிரியாவிடை பெற்றார்.
53 வயதான ஜுலி சங், தென்கொரியாவை பூர்வீகமாகக் கொண்டவர்.
அமெரிக்கா இராஜதந்திர துறையில் அனுபவம்மிக்க அதிகாரியாவார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக 2022 காலப்பகுதியில் நியமனம் பெற்றார்.
இலங்கையில் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின்போது அறகலய எனப்படும் மக்கள் போராட்டம் வெடித்தது.
அரபுலகத்தில் ஏற்பட்ட அரபு வசந்தத்தின்போது ஜுலி சங், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய புள்ளியாக விளங்கினார்.
எனவே, இலங்கையில் ஏற்பட்ட அறகலயவின் பின்னணியிலும் அவர் இருந்தார் என விமல்வீரவன்ச உள்ளட்டவர்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர்.





