இலங்கை செய்தி

இலங்கையிலிருந்து விடைபெறும் அமெரிக்க தூதுவர் பிராந்திய பாதுகாப்பு குறித்து கழுகுப்பார்வை!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் Julie Chung , பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை Air Vice Marshal Sampath Thuyacontha சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையில் தனது பதவிகாலத்தை நிறைவுசெய்துகொண்டு எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பிலிருந்து அமெரிக்க தூதுவர் தாயகம் திரும்புகின்றார்.

இந்நிலையிலேயே பாதுகாப்பு செயலாளரை அவர் நேற்று பிரியாவிடை நிமித்தம் பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, பாதுகாப்புச் செயலாளரும் அமெரிக்கத் தூதுவரும் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடினர்
.
மேலும் பிராந்திய பாதுகாப்பு, திறன் மேம்பாடு மற்றும் பரஸ்பர விடயங்களில் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்தும் கலந்துரையாடினர்.

டித்வா சூறாவளியின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிக்காக அமெரிக்க அரசாங்கத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் தூதரின் சிறப்பான பங்களிப்பிற்கு பாதுகாப்புச் செயலாளர் பாராட்டுத் தெரிவித்தார்.

இச்சந்திப்பு அமெரிக்காவுடன் நெருக்கமான மற்றும் ஆக்கபூர்வமான உறவுகளைப் பேணுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாக அமைந்தது.

அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் மத்யூ ஹவுசும் Lieutenant Colonel Matthew House இதில் பங்கேற்றிருந்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!