வெனிசுலாவின் கார்டெல் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்த்த அமெரிக்கா
வெனிசுலா(Venezuela) மக்களிடையே “கார்டெல் டி லாஸ் சோல்ஸ்”(Cartel de los Soles) என்று அறியப்படும் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் அமெரிக்கா(America) சேர்த்துள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின்(Donald Trump) நிர்வாகம், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுடன்(Nicolas Maduro) தொடர்புடையதாகக் கூறும் கார்டெல் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்த்ததாக குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, வெனிசுலாவின் வெளியுறவு அமைச்சகம், இந்த நடவடிக்கை “அபத்தமான பொய்” என்று தெரிவித்துள்ளது.





