டிரம்ப்பின் நடவடிக்கைக்கு பிரித்தானியாவில் கடும் எதிர்ப்பு
அமெரிக்க ராணுவத்தால் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro) சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்தில், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது.
அமெரிக்கா வெனிசுலா மீது நடத்திய தாக்குதல் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என காமன்ஸ் வெளியுறவு குழு தலைவர் டேம் எமிலி தோர்ன்பெர்ரி (Dame Emily Thornberry) கடுமையாக விமர்சித்துள்ளார்.
“காட்டு தர்பார்” போன்ற இச்செயல் ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு தவறான முன்னுதாரணமாக அமையும் என அவர் எச்சரித்துள்ளார்.
இருப்பினும், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடன் நெருக்கமான உறவை பேணும் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer), இந்தத் தாக்குதலை கண்டிக்க மறுத்துவிட்டார்.
உண்மைகளை ஆராய்ந்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சிறைபிடிக்கப்பட்ட மதுரோ மற்றும் அவரது மனைவி நியூயார்க் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
வெனிசுலாவில் அதிகார மாற்றம் ஏற்படும் வரை அமெரிக்காவே அந்நாட்டை நிர்வகிக்கும் என டிரம்ப் அறிவித்துள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





