டிரம்பிற்கு கட்டார் பரிசளித்த விமானத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்கா

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிற்குக் கட்டார் பரிசாக வழங்கிய போயிங் 747 விமானத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளது.
அரசாங்க விதிகளுக்கு உட்பட்டு விமானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானத்தில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு டிரம்ப்பின் அதிகாரபூர்வ பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு பேச்சாளர் சியான் பார்னெல் தெரிவித்தார்.
அண்மையில் டிரம்ப் மத்திய கிழக்கு வட்டாரத்திற்குப் பயணம் செய்தபோது கத்தார் அந்த விமானத்தை அவருக்குப் பரிசளித்தது. பொதுமக்களிடமும் ராணுவத்திடமும் நூறு மில்லியன் டொலருக்கும் அதிகமாகப் பெற்று புதிய விமானம் வாங்குவதற்குப் பதில் இலவசாமாக ஒன்றைப் பெற்றுக்கொள்ளலாமே என டிரம்ப் தமது Truth Social சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
ஆனால் வெளிநாடுகளிடமிருந்து பரிசு பெறுவது அமெரிக்கச் சட்டத்திற்குப் புறம்பானது என்று அக்கறை எழுந்துள்ளது.