பிரித்தானிய மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
பிரித்தானியாவை தாக்கும் கோரெட்டி (Goretti) புயல் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையானது இன்று மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும். ஸ்கில்லி (Scilly) மற்றும் கார்ன்வால் (Cornwall) தீவுகள் அதிக பாதிப்புக்குள்ளாகும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அமைச்சரவை அலுவலகம் முதல் எச்சரிக்கையை பிற்பகல் 3 மணியளவில் ஸ்கில்லி தீவுகளுக்கு அனுப்பியது, இரண்டாவது எச்சரிக்கையை மாலை 5 மணிக்கு கார்ன்வாலுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த புயலின்போது மரங்கள் முறிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும், மின்துண்டிப்பு ஏற்படும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆகவே அவசர எச்சரிக்கைகள் தொலைபேசி வழியாக அனுப்படும் என்றும், 05 இலட்சம் மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.





