கூகுள் குரோம் பயனர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!
உலகம் முழுவதும் உள்ள 3.5 பில்லியன் கூகுள் குரோம் பயனர்களுக்கு பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடுமையான பாதிப்பு காரணமாக, ஹேக்கர்கள் தொலைதூரத்தில் இருந்து கணினிகளைத் தாக்கும் அபாயம் உள்ளதால் உடனடியாக அப்டேட் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பை மேம்படுத்த, கூகுள் புதிய அப்டேட்டை வெளியிட்டு வருகிறது. குரோம் பிரவுசரை அப்டேட் செய்ய, மேலே உள்ள மெனுவில் “Help” > “About Google Chrome” என்பதைத் தேர்வு செய்து, புதிய பதிப்பை நிறுவ வேண்டும்.
தற்போதைய ஸ்டேபிள் பதிப்பு:
Windows/Mac – 139.0.7258.127/.128
Linux – 139.0.7258.127
மேலும், கூகுளின் சந்தை ஆதிக்கம் தொடர்பாக இங்கிலாந்து CMA விசாரணை நடத்தி வருகிறது.





