நெதர்லாந்து மக்களுக்கு பச்சை பாம்பு தொடர்பில் அவசர எச்சரிக்கை!
நெதர்லாந்தின் டில்பர்க் நகரில் நச்சுப் பாம்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பாம்பு வீட்டிலிருந்து தப்பி வெளியில் திரிவது குறித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மாம்பா (Mamba) எனப்படும் அந்தப் பச்சை நிற நச்சுப் பாம்பைக் கண்டால் விலகியிருக்கும்படி உள்ளூர் அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அது 6 முதல் ஆறரை அடி வரை நீளம் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஒருவேளை பாம்பு கடித்துவிட்டால், உடனடியாக தொடர்புகொள்ள வேண்டிய அவசரச் சேவைகள் குறித்த விவரமும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பாம்பு இதமான, இருட்டான இடத்தை விரும்பும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பச்சை நிற மாம்பா பாம்புக்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவை. பொதுவாக மரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்த வகைப் பாம்புகளின் நஞ்சு விரைவாக உடலில் பரவி சில நாட்களில் ஆளைக் கொன்றுவிடும்.
இருப்பினும், அது மனிதர்களைத் தீண்டுவது அரிது என்று கூறப்படுகிறது.