ஐஸ் பேக்குகளை குழந்தைகள் தொடாமல் பாதுகாக்குமாறு எச்சரிக்கை
ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள கே-மார்ட் (Kmart) கிளைகளில் விற்பனை செய்யப்பட்ட ‘அன்கோ’ (Anko) பிராண்ட் ஐஸ் பேக்குகளில் (Ice Packs) உயிருக்கு ஆபத்தான நச்சுப் பொருள் இருப்பதாகக் கண்டறியப்பட்டு அவை மீளழைக்கப்படுகின்றன.
இந்த ஜெல் பாக்கெட்டுகளில் எத்திலீன் கிளைக்கால் (Ethylene Glycol) எனப்படும் ஆபத்தான ரசாயனம் கலந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதிகள் சேதமடைந்து அந்த நச்சுப் பொருளை உட்கொண்டால் மரணம் கூட சம்பவிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 முதல் 2025 வரை விற்கப்பட்ட இந்தத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தி, குழந்தைகளிடம் இருந்து அப்புறப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவற்றை மீண்டும் கடைகளில் ஒப்படைப்பதன் மூலம் முழுப் பணத்தையும் (Full Refund) பெற்றுக்கொள்ள முடியும் என கே-மார்ட் அறிவித்துள்ளது.





