ஐரோப்பா

Tesco Clubcard வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவித்தல்!

பிரித்தானியாவில் டெஸ்கோ கிளப்கார்டின் £15 மில்லியன் பெறுமதியான வவுச்சர்கள் இன்றுடன் காலாவதியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வவுச்சர்கள் மே 2021 இல் வழங்கப்பட்ட நிலையில், இன்றுடன் காலாவதியாகுகிறது. ஆகவே  ஸ்டோர், ஆன்லைன் அல்லது கிளப்கார்ட் ரிவார்ட் பார்ட்னர்களுடன் நள்ளிரவுக்கு முன் வவுச்சர்களை மீட்டெடுக்குமாறு அந்நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தில் கையொப்பமிட்டுள்ள கடைக்காரர்கள் டெஸ்கோவில் பணம் செலவழிக்கும்போதோ அல்லது பல்பொருள் அங்காடியின் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் வாங்கும்போதோ புள்ளிகளைச் சேகரிக்கின்றனர்.

ஒரு வவுச்சரைப் பெற குறைந்தபட்சம் 150 புள்ளிகள் தேவை. இந்த நடைமுறையில் வரும் ஜுன் மாதம் 14 ஆம் திகதி முதல் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்