பயங்கரவாத தடை சட்டத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்தல்!
பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடை சட்டமூலம் என்பனவற்றை முற்றாக நீக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
அவ்வாறு நீக்க தவறினால் அதற்கு எதிராக அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என்றும் எச்சரித்துள்ளன.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை முழுமையாக வாபஸ்பெற வேண்டும் என சிவில் உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளனர்.
இலங்கையின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் இயற்றப்பட்ட சட்டங்கள் மக்களைக் காப்பதற்காகவன்றி மக்களை அடக்குவதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
(Visited 8 times, 1 visits today)