இலங்கை

ஜப்பானிய நிதியுதவியின் கீழ் விவசாயிகளுக்கு யூரியா வழங்கும் நிகழ்வு

ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக யாழ் மாவட்டத்தில் சிறிய அளவில் நெற் பயிற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான இலவச யூரியா உரம் இன்று வழங்கியவைக்கப்பட்டது.

யாழ் சாவகச்சேரி கமநல சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிஸூகோஷி ஹிடோகி,வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ்,ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயம் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான வதிவிடப் பிரதிநிதி விஜேந்திர சரண், யாழ். மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் பிரணவன் தெய்வநாயகி ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதன் போது சாவகச்சேரி கமல சேவைகள் திணைக்களத்துக்குட்பட் 2777 சிறிய விவசாயிகளுக்கு 25 kg நிறை கொண்ட 3774 யூரியா உரப் பொதிகள் வழங்கப்பட்டன.

இதேவேளை யாழ் மாவட்டத்திற்கு வழங்கவென 25 கிலோ கிராம் கொண்ட 19973 யூரியா பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!