உக்ரைனிற்கு யுரேனியம் டாங்கி எறிகணை;கண்டனம் வெளியிட்டுள்ள ரஷ்யா
உக்ரைனிற்கு யுரேனியம் டாங்கி எறிகணைகளை வழங்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனின் உக்ரைன் தலைநகருக்கான விஜயத்தின்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உக்ரைனிற்கு அமெரிக்கா வழங்க தீர்மானித்துள்ள 31எம்1 ஏ1 ஏபிரகாம் டாங்கிகளில் பயன்படுத்துவதற்கு 120 எம்எம் யுரேனியம் எறிகணைகளை அமெரிக்கா வழங்கவுள்ளது .
உக்ரைனிற்கு பிளிங்கென் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர்மீது ரஸ்யா ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ள சூழ்நிலையில் இந்த விஜயம் இடம்பெறுகின்றது.
மேலும் பிளிங்கென் போரில் கொல்லப்பட்ட உக்ரைன் வீரர்களின் கல்லறைகள் அமைந்துள்ள பகுதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதேவேளை உக்ரைனுக்கு அமெரிக்கா யுரேனியம் டாங்கி எறிகணைகளை வழங்கும் நடவடிக்கைக்கு ரஷ்யா கண்டனத்தை வெளியிட்டுள்ளது.