இலங்கை

மலையகம் 200 நிகழ்வும் நூல் வெளியீடும்

வவுனியாவில் மலையகம் 200 மற்றும் மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் வெளியீடும் இன்று (09) வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்தியாவில இருந்து மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் இரா.சுப்பிரமணியத்தின் மலையக மக்கள் 200 ஆண்டு வரலாறு என்ற நூலும் வெளியிடப்பட்டது.

முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.பி. நடராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், உப தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

(Visited 22 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்