ஐரோப்பா

பிரித்தானியாவில் நிலவும் சீரற்ற வானிலை – நீதித்துறை நடவடிக்கைகள் பாதிப்பு!

பிரித்தானியாவை தாக்கிய கோரெட்டி புயல் காரணமாக மணிக்கு 100 மைல் வேகத்தில் காற்று வீசியதுடன், நாட்டின் பல பகுதிகளில் பனி பொழிவு உச்சம் தொட்டது.

இந்நிலையில் தென்மேற்கு, மிட்லாண்ட்ஸ் மற்றும் தெற்கு வேல்ஸில் ஏறக்குறைய 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர் மின் துண்டிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மரங்கள் முறிந்து விழுந்தமையால் சில சாலைகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஹீத்ரோ விமான நிலையத்தில்  குறைந்தது 69 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  இதனால் 9,000க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டிருந்த கிழக்கு மிட்லாண்ட்ஸ்  (Midlands) மற்றும் பர்மிங்காம் (Birmingham) ஆகிய விமான நிலையங்கள் நேற்யை தினம் தங்கள் ஓடுபாதைகளை மீண்டும் திறந்துள்ளன.

மேலும் சீரற்ற வானிலை காரணமாக வழக்கமான நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் யாரும் கிரவுன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!