இலங்கை

இலங்கையை அச்சுறுத்தும் சீரற்ற காலநிலை – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உட்பட 6 பேர் மரணம்

எதிர்பாராத மழையினால் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவில் நால்வர் உயிரிழந்துள்ளது.

அத்துடன் 11 கிராம உத்தியோகத்தர் பிரதேசங்களில் மக்கள் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அவிசாவளை புவக்பிட்டிய தெற்கு கிராம உத்தியோகத்தர் களத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஒருவர் மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளதாகவும் அதே பிரிவு தெரிவித்துள்ளது

இதேவேளை, தெய்யந்தர, பல்லேவெல பிரதேசத்தில் வீடொன்றின் மீது நேற்று இரவு மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஒருவர் காயமடைந்து எல்லேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தேனகம பிரதேசத்தில் வசித்து வந்த 20 மற்றும் 27 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் எல்லேவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தெய்யந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!