இலங்கையில் சீரற்ற காலநிலை – ஜனாதிபதி விடுத்த பணிப்புரை

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அனர்த்த நிலைமை குறையும் வரை நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய நிலவரப்படி, அனர்த்தங்களினால் 08 மரணங்கள் பதிவாகியுள்ளன.
உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடுகளை உடனடியாக வழங்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளார்.
இதன்படி, உயிரிழந்த ஒருவருக்கு அனர்த்த நிவாரண சேவை நிலையம் 250,000 ரூபா நட்டஈடு வழங்கவுள்ளதாகவும், முற்பணமாக 25,000 ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
(Visited 31 times, 1 visits today)