இலங்கை

நிலவும் சீரற்ற வானிலை : இலங்கையின் பலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தொடர் மழை காரணமாக நில்வலா ஆறு, ஜின் கங்கை மற்றும் குடா கங்கையின் தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட ‘அம்பர்  வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசன திணைக்களம் இன்றும் (30.09)  நீட்டித்துள்ளது.

இதன்படி குறித்த வெள்ள அபாய எச்சரிக்கை வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டாபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, பஸ்கொட, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குறித்த அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல்  களு ஆற்றின் குடா கங்கை துணைப் படுகையில் பாலிந்த நுவர மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவுகள், வெலிவிடிய திவித்துர, பத்தேகம, நியகம, நெலுவ, தவலம, நாகொட, எல்பிட்டிய மற்றும் போபே போத்தல பிரதேச செயலகப் பிரிவுகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகள் மற்றும் பிரதேசங்களில் வசிப்பவர்கள் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை,அனர்த்த நிலைமைகள் தொடர்பில் போதிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!