இலங்கை முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை – நால்வர் பலி!

இலங்கை முழுவதும் சீரற்ற வானிலையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (22) மதியம் வெளியிட்டுள்ள நாளாந்த நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, நுவரெலியா, கண்டி, பதுளை, குருணாகல், காலி உட்பட நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 2, 395 குடும்பங்களைச் சேர்ந்த 9, 542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம், மண்சரிவால் 2 வீடுகள் முழுமையாகவும், 422 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. காலி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 4 times, 4 visits today)