அயோத்தி ராமர் கோயிலில் கட்டுக்கடங்காதக் கூட்டம்: காவல்துறையினருடன், துணை ராணுவப் படையினரும் தீவிர கண்காணிப்பில்
உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமர்கோயில் நேற்று விஷேச பூஜைகளுக்கு பின் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், கோயில் திறக்கப்பட்டது.
இந்நிலையில் கோயிலில் மூலவா் ஸ்ரீபால ராமர் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று முதல் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலில் மூலவரான ஸ்ரீபால ராமரை காண அதிகளவில் மக்கள் குவிந்து வருவதால் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் காயமடைந்துள்ளனர்.
ராமர் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலேயே கட்டுக்கடங்காத கூட்டம் கோயிலுக்குள் நுழைந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அயோத்தியில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் காவல்துறையினருடன், துணை ராணுவப் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், முன்னாள் முதலமைச்சர்கள், தொழிலதிபர்கள், மடாதிபதிகள் என 8,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் அனந்தி பென் படேல் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, கூட்டநெரிசலில் சிக்கி பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த பக்தர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.