தென் கொரியாவை வாட்டி வதைக்கும் இதுவரை கண்டிராத காட்டுத்தீ

தென் கொரியாவில் தொடர்ந்து 6 நாளாகப் பெரும் காட்டுத்தீ வாட்டி வதைக்கும் நிலையில் மரணங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சுமார் 2,700 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். 18க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமுற்றனர். ஒருவரைக் காணவில்லை.
200க்கும் அதிகமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றில் 1,300 ஆண்டுகள் பழமையான புத்தர் கோவிலும் ஒன்றாகும்.
நாடு இதுவரை கண்டிராத கடுமையான காட்டுத்தீயை எதிர்கொள்வதாகத் தற்காலிக ஜனாதிபதி ஹான் Han Duck Soo கூறினார்.
கையில் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வலுவான வறண்ட காற்றால், 17,000 ஹெக்டருக்கும் மேற்பட்ட வனப்பகுதி தீக்கிரையாகிவிட்டது.
200 வீடுகளும் தொழிற்சாலைகளும் அழிந்துபோயின. தென்கொரியா, காட்டுத்தீக்கான எச்சரிக்கை நிலையை உச்சத்திற்கு உயர்த்தியுள்ளது.
நெருப்பைக் கட்டுக்குள் கொண்டுவர சுமார் 6,700 தீயணைப்பாளர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களும் அனுப்பப்பட்டுள்ளன.