பிரான்ஸில் வரலாறு காணாத வெள்ளம் : மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் 2300 பேர்!

பிரான்ஸ் கடந்த 40 ஆண்டுகளில் மோசமான வெள்ளப் பெருக்கை கண்டுள்ளது. இந்நிலையில் 2300 பேர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 1000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக மைக்கேல் பார்னியர் அறிவித்துள்ளார்.
பிரெஞ்சு வானிலை நிறுவனம் Meteo France, Ardeche மற்றும் Lozere பகுதிகளில் உள்ள சில உள்ளூர் பகுதிகளில் 48 மணி நேரத்தில் 700 மில்லிமீட்டர் (27.5 அங்குலம்) மழை பெய்துள்ளதாக அறிவித்துள்ளது.
தேசிய இரயில்வே ஆபரேட்டர் SNCF Lyon மற்றும் Saint-Étienne நகரங்களுக்கு இடையே ரயில் சேவைகள் இயக்கப்படாது எனக் கூறியுள்ளார்.
இரு நகரங்களுக்கு இடையேயான ஒரு முக்கிய நெடுஞ்சாலையும் வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 14 times, 1 visits today)