அமெரிக்காவில் வரலாறு காணாத நெருக்கடி – 22 ஆண்டுகள் கண்டிராத அளவு வட்டி விகிதம்

அமெரிக்காவில் வரலாறு காணாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2001ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிக அளவில் உயர்த்தியுள்ளது.
வட்டி விகிதம் கால் சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பணவீக்கத்தைக் குறைக்க நிதி நிலைமைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
வட்டி விகிதம் தற்போது 5.25 சதவீதமாகும். அது 5.5 சதவீதத்திற்கு உயர்த்தப்பட்டது. அது 22 ஆண்டுகளில் காணாத உயர்வு என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
பணவீக்கத்தைச் சமாளிக்க இன்னும் அதிகளவில் வட்டி விகிதத்தை இந்த ஆண்டு (2023) வங்கி உயர்த்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)