மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ஐதேக வலியுறுத்து!
முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.
இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள Thalatha Athukorala கூறியவை வருமாறு,
“ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் நிச்சயம் இணைந்து செயல்படும்.
எனவே, முடிந்தால் அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தட்டும். எமது கூட்டு பலம் என்னவென்பது தெரியவரும்.
ரணில் விக்கிரமசிங்க என்பவர் நாட்டுக்கு சேவையாற்றிய தலைவர். எனவே, தலைவர் தேர்வின்போது ரணில் விக்கிரமசிங்கவே எனது முன்னுரிமையாக அமையும்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமைப்பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டும் என நாம் வலியுறுத்தவில்லை.” – என்றார்.





