இலங்கை செய்தி

செல்பி எடுக்க முயன்று உலக முடிவு பள்ளத்தில் வீழ்ந்த பல்கலைக்கழக மாணவி

ஹோர்டன் பிளைன்ஸ் ‘உலக முடிவு’ (World’s End) பகுதியில் செல்பி  எடுக்க முயன்றபோது, சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் காயங்களின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி உலக முடிவுப் பகுதியின் பிரதான சரிவில் செல்பி எடுக்க முயன்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது  வீழ்ந்த மாணவி, அங்கிருந்த மரக் கிளை ஒன்றில் சிக்கிக்கொண்டார்.

நிலைமையைப் அவதானித்த ஹோர்டன் பிளைன்ஸ் தேசிய பூங்காவின் சாரதி ஒருவர், தனது உயிரையும் பொருட்படுத்தாது சரிவில் இறங்கி அந்த மாணவியை மரத்திலிருந்து கீழே இறக்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, பட்டிப்பொல பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து அந்த மாணவியை பாதுகாப்பாக மேலே கொண்டு வந்துள்ளனர் .

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!