முடி உதிர்வை தடுக்கும் மருந்தை கண்டுப்பிடித்து கொழும்பு பல்கலைக்கழகம் சாதனை
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் முடி உதிர்வதைத் தடுக்கும் மற்றும் முடியை மீண்டும் வளரக்கூடிய மருத்துவ கலவையை தயாரிப்பதில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த கலவையை உருவாக்கிய உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் சமிர சமரகோன் கூறுகையில், இது முன்கூட்டிய முடி உதிர்வை நிறுத்தி மீண்டும் முடியை வளர்க்கும் திறன் கொண்டது.
இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட கலந்துரையாடலில், 90 வீதம் பெறுபேறுகளை வழங்குவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்ட மருந்து ஒன்று பேராசிரியர் சமீர சமரகோன் உள்ளிட்ட ஆய்வுக் குழுவினரால் உருவாக்கப்பட்டது.
(Visited 7 times, 1 visits today)