செய்தி வட அமெரிக்கா

யுனைடெட் ஹெல்த்கேர் தலைமை செயல் அதிகாரி சுட்டுக் கொலை

அமெரிக்காவில் மருத்துவ காப்பீடு மற்றும் மருத்துவ உதவி திட்டங்களை வழங்கும் முன்னணி நிறுவனம் யுனைடெட் ஹெல்த்கேர்.

மத்திய-மாநில அரசின் நிதியுதவி பெறும் மருத்துவ உதவித் திட்டங்களுக்கான காப்பீட்டையும் இந்நிறுவனம் நிர்வகிக்கிறது.

இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரையன் தாமஸ்நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வெளியே மர்ம நபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கொலையாளியை தேடி வருகின்றனர். யுனைடெட் ஹெல்த்கேர் சார்பில் வருடாந்திர முதலீட்டாளர் மாநாடு அந்த ஓட்டலில் நடைபெறுவதாக இருந்தது. மாநாட்டில் பங்கேற்பதற்காக தாமஸ் வந்தபோது திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார்.

2004ம் ஆண்டு முதல் யுனைடெட் ஹெல்த்கேர் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தாம்சன், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

(Visited 27 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content