வித்தியாசமான முறையில் ட்ரம்பை வரவேற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் : இணையத்தில் வைரலாகும் படம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்க ஒரு குழுவினர் நிகழ்த்தும் பாரம்பரிய நடனம் சமூக வலைத்தளத்தில் அதிகம் கவனம் பெற்றுள்ளது.
வைரலாகி வரும் காட்சிகளில், பெண்கள் தங்கள் தலைமுடியை பக்கவாட்டில் புரட்டி கவிதை பாடுவதைக் காணலாம். அவர்கள் செய்வது அல்-அய்யாலா என்று அழைக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதி மாளிகையான கஸ்ர் அல் வதனுற்கு ட்ரம்ப் வருகை தந்துள்ள நிலையில், அங்கு இருபக்கங்களிலும் இருக்கும் பெண்கள் வெள்ளை நிற உடையை அணிந்து நீண்ட கருங் கூந்தலை பக்கவாட்டில் அசைத்து கவிதை பாடி வரவேற்றுள்ளனர்.
பின்னால் நிற்கும் ஆண்கள் வாசிக்கும் டிரம்ஸின் துடிப்புகளுக்கு ஏற்ப பெண்கள் தங்கள் தலைமுடியை வியத்தகு முறையில் புரட்டுகிறார்கள்.
யுனெஸ்கோவின் அறிக்கையின்படி, அல்-அய்யாலா வடமேற்கு ஓமானிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் பிரபலமானது. இந்த பாரம்பரிய நடனத்தில், பங்கேற்பாளர்கள் நடனமாடும்போது கவிதை பாடப்படுகிறது மற்றும் டிரம்ஸ் வாசிக்கப்படுகிறது.