விசா கொள்கையை புதுப்பித்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) தனது விசா விலக்கு கொள்கையை புதுப்பித்துள்ளது.
இதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவு அமைச்சகம், 110 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் நாட்டிற்கு வருவதற்கு முன்பு விசாவைப் பெற வேண்டும் என்று கூறியது.
பயணத்தை எளிதாக்குவதற்கும், சுற்றுலாப் பயணிகளுக்கான வருகை செயல்முறையை எளிதாக்குவதற்கும் இந்த முன்முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய அல்பேனியா, அன்டோரா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, அஜர்பைஜான், பஹ்ரைன், பார்படாஸ், பிரேசில், பெலாரஸ், பெல்ஜியம், புருனே, பல்கேரியா, கனடா, சிலி, சீனா, கொலம்பியா, கோஸ்டாரிகா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எல் சால்வடார், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜார்ஜியா, ஜெர்மனி, ஹோண்டுராஸ், ஹங்கேரி, ஹாங்காங் (சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதி), ஐஸ்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கஜகஸ்தான், குவைத், கிரிபட்டி, குவைத் , லாட்வியா, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, லக்சம்பர்க், மலேசியா, மாலத்தீவு, மால்டா, மொரீஷியஸ், மெக்சிகோ, மொனாக்கோ, மாண்டினீக்ரோ, நவுரு, நியூசிலாந்து, நார்வே, ஓமன், பராகுவே, பெரு, போலந்து, போர்ச்சுகல், கத்தார், அயர்லாந்து குடியரசு, ருமேனியா, ரஷ்யா செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், சான் மரினோ, சவுதி அரேபியா, சீஷெல்ஸ், செர்பியா, சிங்கப்பூர், ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, சாலமன் தீவுகள், தென் கொரியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, பஹாமாஸ், நெதர்லாந்து, யுகே, அமெரிக்கா, உக்ரைன், உருகுவே, வாடிகன் ஹெலெனிக், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, ஆர்மீனியா, பிஜி, கொசோவோ ஆகிய நாடுகளின் குடிமக்களுக்கு மட்டுமே visa-on-arrival வசதி அனுமதிக்கப்பட்டுள்ளது.