இலங்கையில் பாரிய போராட்டத்திற்கு தயாராகும் தொழிற்சங்கங்கள்!
இலங்கையில் நாளைய (27.11) தினம் நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டத்திற்கான பிராசாங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச துறை மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி நாளை நண்பகல் 12.00 மணிக்கு போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் சந்தன சூரியாராச்சி தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20000 ரூபாய் கொடுப்பனவை வலியுறுத்தியே மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)





