பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் ஜனவரியில்
2026ஆம் கல்வியாண்டுக்கான இலவசப் பாடசாலைச் சீருடைத் துணிகளை இம்மாதமே விநியோகிக்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 11 மில்லியன் மீற்றருக்கும் அதிகமான சீருடைத் துணிகள் ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
எதிர்வரும் ஜனவரி 13ஆம் திகதி இந்தத் துணிகள் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கப்படவுள்ள நிலையில், ஜனவரி 19ஆம் திகதி முதல் கோட்டக் கல்வி அலுவலகங்கள் ஊடாகப் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.
அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களைச் சேர்ந்த சுமார் 44 இலட்சம் மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் இம்முறை சீருடைகளைப் பெற்றுக்கொள்ளத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





