Meningitis குறித்து எச்சரிக்கை: Kent பல்கலை மாணவன் உட்பட இருவர் பலி!
கென்ட் Kent பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உட்பட இரு இளைஞர்கள் மெனிஞ்சைடிஸ் (Meningitis) எனப்படும் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சிலர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
குறித்த நோய்த்தொற்று கேன்டர்பரி பகுதியில் பரவி வருவதால், பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நோய் பரவலைக் கட்டுப்படுத்த பிரிட்டன் சுகாதாரப் பாதுகாப்பு முகமை மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் இணைந்து சுமார் 30 ஆயிரம் பேருக்கு இது குறித்த விழிப்புணர்வு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
காய்ச்சல், தலைவலி மற்றும் உடலில் தடிப்புகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமாக வாழும் இடங்களில் இந்த பாக்டீரியா விரைவாகப் பரவக்கூடும் என்பதால், அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





