இலங்கைக்கு விஜயம் செய்யும் யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம்

ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) பணிப்பாளர் நாயகம் Audrey Azoulay இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜூலை 16 முதல் ஜூலை 19 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளதுடன், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பதில் வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரையும் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் நெலும் பொகுண திரையரங்கில் யுனெஸ்கோவில் இலங்கை அங்கத்துவம் பெற்றதன் 75வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்று யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களுக்குச் செல்வார்.
(Visited 47 times, 1 visits today)