இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு மிரட்டல் அழைப்பு விடுத்த பாதாள உலகக் குழு
ஆசிய கோப்பை தொடரின் போது இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு ஒரு பாதாள உலகக் குழுவிலிருந்து மிரட்டல் அழைப்பு வந்ததை மும்பை குற்றப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
பயங்கரவாதத் தலைவர் தாவூத் இப்ராஹிம் தலைமையிலான டி-கம்பெனி எனப்படும் குழுவால் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று முறை அவர்கள் மிரட்டல் செய்திகளை அனுப்பியுள்ளனர். 5 கோடி ரூபாய் கப்பம் கோரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் காவல்துறையினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். மேலும் முகமது தில்ஷாத் மற்றும் முகமது நவீத் ஆகிய இரு சந்தேக நபர்கள் கரீபியனில் கைது செய்யப்பட்டு ஒகஸ்ட் முதலாம் திகதி இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பு (இன்டர்போல்) அவர்களை டிரினிடாட் மற்றும் டொபாகோவில் கைது செய்ய உதவியது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இறந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாபா சித்திக்கின் மகன் ஜீஷன் சித்திக்கிடமிருந்து 10 கோடி ரூபாய் மீட்கும் தொகையும் கோரப்பட்டுள்ளது.
ரிங்கு சிங் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது 100வது போட்டியில் விளையாடினார். இந்தியா ஒன்பதாவது பட்டத்தை வெல்ல உதவுவதற்காக வெற்றி ஓட்டத்தையும் அவர் அடித்தார்.





