காஸாவில் போரை நிறுத்த முடியாத நிலை -அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் காஸாவில் போர் நிறுத்தம் என்பது சிரமம் என்று கூறியிருக்கிறார்.
லெபனானில் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர முயன்று வருவதாகவும் அதற்கு வாய்ப்பு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஜெர்மன், பிரான்ஸ் பிரித்தானிய தலைவர்களைச் சந்தித்தபின் ஜனாதிபதி பைடன் செய்தியாளர்களிடம் பேசினார்.
இஸ்ரேல் காஸாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. வட காஸாவில் ஜபலியா அகதி முகாமில் இஸ்ரேல் நடத்திய ஆகாயத் தாக்குதலில் குறைந்தது 33 பேர் மாண்டனர்.
அவர்களில் 21 பேர் பெண்கள் என்று ஹமாஸ் அதிகாரிகள் கூறினர். ஜபலியா அகதி முகாமில் சுமார் 400,000 பேர் போதுமான உணவோ, குடிநீரோ இல்லாமல் இரண்டு வாரத்துக்கு மேல் சிக்கியுள்ளனர்.
நிலைமை மோசம் என்பதை இதைவிட எப்படித்தான் சொல்வதெனத் தெரியவில்லை என்று ஐக்கிய நாட்டு நிறுவன மனிதாபிமான உதவி அலுவலகத்தின் தலைவர் கூறினார்.
வட காஸாவுக்கு 30 லொரிகளில் உணவும் குடிநீரும் மருந்தும் அனுப்பியிருப்பதாக நேற்று இஸ்ரேல் கூறியது.