ஹமாஸின் தாக்குதலுக்கு உதவிய ஐ.நா ஊழியர்கள் : ஆதாரங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டு!
பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா.வின் உதவி நிறுவனத்தில் பணிபுரியும் ஒன்பது ஊழியர்கள், இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுக்கு உதவியதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த 09 ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் உள்ள முக்கிய உதவி நிறுவனத்திற்கு எதிராக இஸ்ரேல் குற்றச்சாட்டுகளை எழுப்பிய நிலையில் குறித்த 09 ஊழியர்களிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
UN இன் உள் கண்காணிப்பு சேவைகள் அலுவலகம், 7 அக்டோபர் தாக்குதலில் ஒன்பது ஊழியர்களின் சாத்தியமான ஈடுபாட்டை சுட்டிக்காட்டும் போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளது.
(Visited 18 times, 1 visits today)





