இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ஐ.நா. பொதுச்செயலாளர்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான புதிய சமாதான ஒப்பந்தத்தை ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்றுள்ளார்.
அமெரிக்கா முன்வைத்த சமாதான திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனை அடுத்து ஐ.நா பொதுச் செயலாளரின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதை உறுதி செய்யும் ஒப்பந்தத்தை வரவேற்பதாக பொதுச்செயலாளர் கூறினார்.
ஒப்பந்தத்தின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றவும், அனைத்து பணய கைதிகளையும் உடனடியாக விடுவிக்கவும் அனைத்து தரப்பினருக்கும் ஐ.நா. பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் இரு நாடுகள் தீர்வுக்கான நம்பகமான அரசியல் பாதையாக இந்த ஒப்பந்தம் அமையவுள்ளதாக குட்டெரெஸ் மேலும் தெரிவித்துள்ளார்.





