அரசுக்கு ஐ.நா. விடுத்த அவசர அழைப்பு: பாலியல் வன்முறைகளுக்கு மன்னிப்பு கோருமாறு வலியுறுத்தல்
இலங்கையில் யுத்த காலத்தின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
‘நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் நாம் இழந்துவிட்டோம்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, கடந்த 10 ஆண்டுகளில் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
2009-ல் போர் முடிவுக்கு வந்த பிறகும், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் இன்னும் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளுடன் வாழ்வதாகவும், அவர்கள் மீதான அச்சுறுத்தல்கள் தொடருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசு கடந்த கால தவறுகளுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டுமெனவும், பாதுகாப்பு மற்றும் நீதித்துறையில் உடனடி சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) வலியுறுத்தியுள்ளார்.





